search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு போலீஸ்"

    பாலியல் குற்றச்சாட்டு சம்பந்தமாக புகார் தெரிவிக்கும் பெண்களின் பெயரையோ, புகைப்படத்தையோ வெளியில் தெரிவிக்கக்கூடாது என டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
    பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றச்சாட்டு சம்பவம் தமிழகம் மட்டும் அல்லாமல் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பேட்டி அளித்த கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    இதுதொடர்பாக பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்ட அரசாணையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியிடப்பட்டதால் சர்ச்சை ஆனது.

    இதைத்தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    காவல் நிலையங்களில் பாலியல் குற்றச்சாட்டு சம்பந்தமாக புகார் தெரிவிக்கும் பெண்களின் பெயரையோ, புகைப்படத்தையோ வெளியில் தெரிவிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் 22 போலீஸ் டி.எஸ்.பி.க்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கான உத்தரவை போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார். #TNPolice
    சென்னை:

    சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. விசுவநாத் ஜெயன் தரமணி சரக உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தரமணி சரக உதவி கமி‌ஷனர் சுப்பராயன் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    பெண்களுக்கு எதிரான குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி. பன்னீர்செல்வம் மாதவரம் போக்குவரத்து குற்ற புலனாய்வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    தலைமையிடத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ் பரங்கிமலை சரக உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மதுரை மாவட்ட பெண்கள் குற்றப்புலனாய்வு பிரிவின் டி.எஸ்.பி. மகேந்திரன் மதுராந்தகம் சரக டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

    தர்மபுரி மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி. சுப்பையா சத்தியமங்கலம் சரக டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

    காஞ்சீபுரம் மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி. கண்ணன் ராயபுரம் சரக உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சிவகங்கை மாவட்ட நில மோசடி விசாரணை பிரிவு டி.எஸ்.பி. இளங்கோவன் நாங்குநேரி டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். #TNPolice
    தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 20 ஆயிரம் போலீசார் நாளை ரத்த தானம் செய்கின்றனர்.
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 20 ஆயிரம் போலீசார் நாளை ரத்த தானம் செய்கின்றனர்.

    ஒவ்வொரு போலீசாரிடம் இருந்தும் 1 யூனிட் வீதம் மொத்தம் 20 ஆயிரம் யூனிட் ரத்தம் எடுக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் ரத்தம் அனைத்தும் பாதுகாப்பாக அரசு ரத்த வங்கிகளில் சேமிக்கப்படுகிறது.

    இதுபற்றி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இயக்குனர் செந்தில்ராஜ் மற்றும் ரத்த பரிமாற்ற குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நாளை சுமார் 20,000 போலீசார் மற்றும் அதிகாரிகள் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து தாமாகவே முன்வந்து ரத்த தானம் கொடுக்க உள்ளனர்.

    நமது மாநிலத்தில் ஆண்டிற்கு 8,00,000 யூனிட்ஸ் ரத்தம் தேவையுள்ளது, இதில் சுமார் 50 சதவீதம் ரத்தம் ( 4 லட்சம் யூனிட்ஸ்) 89 அரசு ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படுகிறது மீதமுள்ள 50 சதவீதம் ரத்தம் (4 லட்சம் யூனிட்ஸ்) தனியார் ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் 33,000 முதல் 35,000 யூனிட்ஸ் வரை தேவைப்படுகிற ரத்தம், 89 அரசு ரத்த வங்கிகள் மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலம் நம் மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது.

    மே மாதத்தில் பொதுவாக கல்லூரி விடுமுறையாக இருப்பதாலும், கொடையாளிகள் ரத்தம் கொடுப்பது குறைவாக இருப்பதாலும் ஜூன் மாதத்தில் ரத்தம் அதிகமாக தேவைப்படும்.

    எனவே, ஜூன் மாதத்தில் காவல் துறையால் வழங்கப்படவுள்ள 20,000 யூனிட்ஸ் ரத்தம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

    மேலும், சராசரியாக ஒருமாத பயன்பாட்டிற்கு தேவைப்படுகிற 33,000 முதல் 35,000 யூனிட்ஸ் வரை ரத்தத்திற்கு, 29.06.2018 அன்று காவல்துறையால் திட்டமிடப்பட்ட ரத்த தான முகாமில் வழங்கப்படவுள்ள 20,000 யூனிட்ஸ் ரத்தம் ஒருபோதும் வீணாகப் போவதில்லை. இந்த ரத்தம் ஏழை எளியவர்களுக்கு அரசாங்க மருத்துவமனைகளில் உபயோகப்படுத்தப்பட உள்ளது

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சென்னையில் பெண் போலீஸ் உயர் அதிகாரிகளை இன்ஸ்பெக்டர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்த விவகாரம், மேலும் ஒரு ஆடியோ பேச்சு மூலம் கடும் புயலை கிளப்பியுள்ளது. #TNPolice
    சென்னை:

    ஏற்கனவே ஆடியோ பேச்சு விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ள உதவி கமிஷனர் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை தேனாம்பேட்டை உதவி கமிஷனர் முத்தழகு நேற்று முன்தினம் இரவு மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார். நேற்று அவர் மீண்டும் மாற்றப்பட்டார். டி.ஜி.பி. அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் அவர் இருப்பார் என்று டி.ஜி.பி. அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார்.

    அடுத்தடுத்து இந்த மாற்றங்களைச் சந்தித்த உதவி கமிஷனர் முத்தழகு ஆடியோ பேச்சு விவகாரத்தால்தான் இந்த சிக்கலில் சிக்கினார். அவர் குற்றவாளி ஒருவரை காப்பாற்றுவதற்காக பணம் கேட்டு பேரம் பேசியது போன்ற ஆடியோ பேச்சு நேற்று முன்தினம் இரவு ‘வாட்ஸ்-அப்’ மூலம் வெளியானது.

    சமீபத்தில் தேனாம்பேட்டை நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ராக்கெட் ராஜா துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் சுந்தர், ராஜ்சுந்தர், பிரகாஷ் உள்ளிட்ட 4 பேரும் தேனாம்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதில் கைதான குற்றவாளி ஒருவரின் தம்பியிடம் உதவி கமிஷனர் முத்தழகு பணம் கேட்டு பேரம் பேசுவதுபோல, ‘வாட்ஸ்-அப்’பில் வெளியான ஆடியோ பேச்சில் தகவல் வெளியானது.

    குறிப்பிட்ட குற்றவாளிமீது கோவையில் ரூ.60 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்வேன் என்றும், கைது செய்யாமல் இருக்க பெரிய அளவில் தனக்கு தொகை வேண்டும் என்றும், தனக்கு பெரிய அளவில் பணப்பிரச்சினை இருப்பதாகவும் உதவி கமிஷனர் பேசுகிறார்.

    அதற்குப்பதில் அளித்த குற்றவாளியின் தம்பி முதலில் ரூ.3 லட்சம் தருவதாக சொல்கிறார். அதற்கு உதவி கமிஷனர் சம்மதிக்கவில்லை. அதற்கு அடுத்து ரூ.5 லட்சம் தருவதாக சொல்கிறார். அது ‘டீ’ செலவுக்குக்கூட பத்தாது என்று உதவி கமிஷனர் கூறுகிறார்.

    பெரிய அளவில் தொகையை எடுத்துக்கொண்டு சென்னைக்கு வரவேண்டும் என்றும், சென்னையில் தனது அலுவலகத்திற்கு வரக்கூடாது என்றும், அண்ணாநகருக்கு வரும்படியும் உதவி கமிஷனர் ஆடியோ பேச்சில் சொல்கிறார். அதற்கு குற்றவாளியின் தம்பியும் சம்மதம் தெரிவிக்கிறார்.

    இந்த ஆடியோ பேச்சின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன் எதிரொலியாகவே நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட முத்தழகு, நேற்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

    ஆடியோ பேச்சு விவகாரத்தால் சிக்கலில் மாட்டியுள்ள உதவி கமிஷனர் முத்தழகுவிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது:-


    ஆடியோ பேச்சில் உள்ள குரல் என்னுடைய குரல் அல்ல, தேனாம்பேட்டை நட்சத்திர ஓட்டலில் ராக்கெட் ராஜாவோடு கைது செய்யப்பட்ட அவரது கூட்டாளிகள் 4 பேரையும் குண்டர் சட்டத்தின்கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனருக்கு நான்தான் சிபாரிசு செய்தேன்.

    ராக்கெட் ராஜாவோடு தங்கியிருந்த அவர்களை கைது செய்ததும் நான்தான். தென்மாவட்ட போலீசார்கூட, அவர்களை கைது செய்ய முடியவில்லை. நான் பணம்கேட்டு, பேரம் பேசியிருந்தால் அவர்களை ஏன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சிபாரிசு செய்ய வேண்டும்? ஆடியோ பேச்சு விவகாரம் முழுக்க முழுக்க தவறானது, எனக்கு எதிரானவர்கள் அந்த பிரச்சினையை பெரிதாக்கிவிட்டார்கள். என்னை மத்திய குற்றப்பிரிவுக்குத்தான் மாற்றி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உதவி கமிஷனர் முத்தழகு பிரச்சினை முடிவுக்கு வருவதற்குள் சென்னை போலீசில் இன்னொரு ஆடியோ பேச்சு விவகாரம் புயலை கிளப்பியுள்ளது. 2 பெண் போலீஸ் உயர் அதிகாரிகளை இன்ஸ்பெக்டர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பது, அந்த ஆடியோ பேச்சில் உள்ளது. குற்றவாளி ஒருவருக்கு சாதகமாக பேசும் அந்த இன்ஸ்பெக்டர் பெண் போலீஸ் உயர் அதிகாரிகளை மிகவும் இழிவாக பேசி உள்ளார்.

    இன்ஸ்பெக்டர் பேசிய பேச்சு தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் உயர் அதிகாரிகளிடமே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அலுவலக உயர் அதிகாரிகளிடமும் அந்த இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு பரிந்து பேசும் அந்த இன்ஸ்பெக்டரை குறிப்பிட்ட வழக்கில் இருந்து மாற்றி அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

    கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் இன்ஸ்பெக்டர் பேசிய பேச்சை ஆடியோவாக ‘வாட்ஸ்-அப்’பில் வெளியிடுவோம் என்று புகார்தாரர்கள் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக இதுபோன்ற வாட்ஸ்-அப்பில் வெளியாகும் ஆடியோ பேச்சுக்களும், வீடியோ காட்சிகளும் தமிழக போலீஸ் துறையையே உலுக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #TNPolice
    ×